ருத்ரா-விசேட நிருபர்
எல்லா விதமான கஷ்டங்களுக்கும் நிவாரணம் "ராம நாம" ஜெபமே.
☆.காலை படுக்கையில் விழிப்பு வந்தவுடனே சொல்லவேண்டியது 'ராம நாமம்'.
☆.எழுந்து கடமைகளை செய்யும்போதும் சொல்லவேண்டியதும் 'ராம நாமம்'.
அந்த நாள் நமக்கு 'ராம நாம' நாளாக இருக்கவேண்டும்.
'ராம நாம' ஜெபத்தில் நாம் இருந்தால், நமது கர்ம வினையின்படி ஏதேனும் துக்கமோ, அவமானமோ நிகழவேண்டியதாயின் அவைகள் தடுக்கப்படும் அல்லது நமக்கு அது பாதிப்பு இன்றி மாற்றி அமைக்கப்படும். பாதிப்பினை தாங்கும் வலிமையையும், அதுவும் பிரசாதமாக ஏற்கும் பக்குவமும் வரும்.
எனவே தினமும் ராமநாமத்தை உச்சரித்து எமது கர்ம வினைகளை செம்மைப்படுத்திக் கொள்வோம்.