மட்டக்களப்பு கல்லடி புதுமுகத்துவாராம் இக்னேசியஸ் வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

 


கிழக்கின் சிறகுகள் அமைப்பினால் கிழக்கு மாகாணத்தின் பின்தங்கிய கிராம பாடசாலை மாணவர்களின் கல்வி,சுகாதாரம்,போஷாக்கு போன்ற செயல்பாட்டினை மேம்படுத்தும் வகையில் முன்னெடுத்துள்ள திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் செயல்பாட்டினை முன்னெடுத்து வருகின்றன

புலம்பெயர் நன்கொடையாளர்களின் நிதி பங்களிப்புடன் கிழக்கின் சிறகுகள் அமைப்பினால் முன்னெடுத்துள்ள செயல் திட்டத்தின் கீழ் கனடா நாட்டில் வாழும் நன்கொடையாளர் சசிகுமாரின் பிள்ளைகளின் பிறந்த தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு கல்லடி புதுமுகத்துவாராம் இக்னேசியஸ் வித்தியாலய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு கல்லடி புதுமுகத்துவாராம் இக்னேசியஸ் வித்தியாலய அதிபர் வசந்தி ஜெயந்திரராஜா தலைமையில் நடைபெற்ற கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் கிழக்கின் சிறகுகள் அமைப்பின் உறுப்பினர்கள் ,பாடசாலை ஆசிரியர்கள்,மாணவர்கள் கலந்துகொண்டனர்