பாடசாலை மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தை பேணும் வகையில் தற்காப்பு கலையை ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ் எக்ஸ்ட்ரீம் சோட்டோகான் கராட்டி பயிற்சி கழகத்தினால் தற்காப்பு கலை பயிற்சி பட்டறைகளை மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடாத்தப்பட்டு வருகின்றன.
மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான பயிற்சி பட்டறைகள் கழகத்தின் தற்காப்பு கலை பயிறுவிப்பாளரும் கழக பொறுப்பாசிரியருமான சென்.சி.எஸ்.சுகிர்தன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மட்டக்களப்பு சின்ன ஊரணி கழக பிரதான மண்டபத்தில் இன்று மாலை நடாத்தப்பட்ட தற்காப்பு கலை பயிற்சி பட்டறையில் கழகத்தின் தற்காப்பு கலை பயிற்றுவிப்பாளர்,மாணவர்கள் கலந்துகொண்டனர்