‘கனவு மெய்ப்படும்’ எனும் கருப்பொருளில் சுயதொழில் முயற்சியாளர்களுக்கான ஊக்குவிப்பு திறன் விருத்தி தொடர்பான ஒரு நாள் பயிற்சி கருத்தரங்கு நேற்று மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
தற்போதைய பொருளாதார நெருக்கடியான நிலையில் மண்முனை வடக்கு பிரதேச செயலக
பிரிவில் தொழில் முயற்சியில் ஈடுபட்டுள்ள
தொழில் முயற்சியாளர்களை
ஊக்குவிக்கும் வகையில் மண்முனை வடக்கு பிரதேச செயலக சிறுதொழில் முயற்சி
அபிவிருத்தி பிரிவு , மற்றும் விதாதா வள நிலையத்தினால்
முன்னெடுக்கப்பட்டுள்ள நிகழ்ச்சி திட்டத்தின் தெரிவு செய்யப்பட
முயற்சியாளர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மட்டக்களப்பு பாடுமீன் லயன்ஸ் கழகத்தின் அனுசரணையில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் தலைமையில் மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் நடைபெற்ற பயிற்சி கருத்தரங்கில் வளவாளராக மனித உரிமை செயல்பாட்டாளரும் ஆளுமை விருத்தி ஆலோசனை வழிகாட்டல் வளவாளருமான நளினி ரட்ணராஜா கலந்துகொண்டார.;
‘கனவு மெய்ப்படும்’ எனும் கருப்பொருளில் சுயதொழில்
முயற்சியாளர்களுக்காக்க நடாத்தப்பட்ட கருத்தரங்கில் பாடுமீன் லயன்ஸ் கழக
தலைவரும்,பிரதேச செயலக பிரதம கணக்காளருமான,
எஸ். புவனேஸ்வரன், கனவு
மெய்யப்படும் நிகழ்ச்சி திட்ட ஒருங்கிணைப்பாளர் தர்சினி சுபாகரன் மற்றும்
மண்முனை வடக்கு பிரதேச செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவு
,மற்றும் விதாதா வள நிலைய உத்தியோகத்தர்கள்,தொழில் முயற்சியாளர்களாக
கலந்துகொண்டனர்
இதன்போது மனித வலு வேலைவாய்யப்பு திணைக்களத்தினால் மாவட்ட செயலகத்தில் நடத்தப்பட்ட மூன்று நாள் நடாத்தப்பட்ட தொழில் முயற்சியாளர்களுக்கான பயிற்சி பட்டறையில் கலந்துகொண்ட பயனாளிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன