பெற்றோலின் விலையை குறைத்துள்ள போதிலும் டீசல் விலை குறைக்கப்படவில்லை.

 

 


பெற்றோல் விலை குறைக்கப்பட்ட போதிலும் பஸ் கட்டணம் குறைக்கப்படாது என பஸ் சங்கங்கள் தெரிவித்துள்ளதுடன், முச்சக்கரவண்டிக் கட்டணத்தில் எவ்வித குறைப்பும் செய்யப்படமாட்டாது என்று முச்சக்கரவண்டி தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

பெற்றோலின் விலையை குறைத்துள்ள போதிலும் டீசல் விலை குறைக்கப்படவில்லை என்பதால், கட்டணங்கள் குறைக்கப்பட மாட்டாது என்று இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டார்.

பஸ் கட்டணத்தில் எவ்வித குறைப்பும் இடம்பெறாது என்று அகில இலங்கை தனியார் பஸ் சங்க சம்மேளனத்தின் தலைவர் அஞ்சன பிரியஞ்சித் குறிப்பிட்டார்.

இதேவேளை, பெற்றோலின் விலை குறைக்கப்பட்டாலும் முச்சக்கர வண்டி கட்டணத்தில் எவ்வித குறைப்பும் ஏற்படாது என முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்தது.  

பயணிகள் போக்குவரத்துக்கு தேவையான பெற்றோலை அரசாங்கம் வழங்குவதில்லை என்ற காரணத்தாலே கட்டணக் குறைப்பு இல்லை என்று  சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.

மேலும், 5 லீற்றர் கோட்டாவை அரசாங்கம் அதிகரிக்குமாயின் கட்டணத்தை திருத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெற்றோல் விலை குறைந்துள்ள போதிலும் பேக்கரிகள் மற்றும் உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட மாட்டாது என்று உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சந்தையில் ஏனைய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டால் மாத்திரமே பால் தேநீர் உள்ளிட்ட உணவு மற்றும் பானங்களின் விலையை குறைக்க முடியும் என சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.