சிறுவர் சிநேக மாநகர் எனும் திடத்தின் ஊடாக மட்டக்களப்பு மாநகரை தூய்மைப்படுத்தும் துப்பரவு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

 


மட்டக்களப்பு மாநகர சபையினால் முன்னெடுத்துள்ள சிறுவர் சிநேக மாநகர் எனும் திடத்தின் ஊடாக மாநகரை தூய்மைப்படுத்தும் துப்பரவு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

சிறுவர்களை முன்னிலைப்படுத்திய மாநகர சபையினால்முன்னெடுத்துள்ள சிறுவர் சினேக மாநகர திட்டத்தின் கீழ் மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் மாநகர ஆணையாளர் என் .மதிவாணன் தலைமையில் முன்னெடுத்துள்ள மாநகரை முதலமைப்படுத்தும் திட்டத்தின் மாநகர சபை ஊழியர்கள் ,மாநகரசபை உறுப்பினர்களின் பங்களிப்புடன் மாநகரை தூய்மைப்படுத்தும் துப்பரவு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன

தொடர்ச்சியாக மாநகர பகுதிகளில் முன்னெடுத்துவரும் துப்பரவு செய்யும் பனியின் கீழ் பொதுமக்களால் வீசப்பட்டு மக்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை அகற்றும் பணியினை மட்டக்களப்பு லொயிட்ஸ் பார்க் மற்றும் அதனை அண்டிய வாவிக்கரை பகுதியில் இன்று முன்னெடுக்கப்பட்டன.