எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் நாட்டில் மின் வெட்டு இருக்காது .

 


நாட்டில் மின்சாரத்தை தடை இன்றி வழங்குவது தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தகவல் வெளியிட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் நாட்டில் மின்சாரத்தை தடை இன்றி வழங்கலாம் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.