பாடசாலைக் கட்டணங்களைத் தவிர மேலதிகமாக எதனையும் அறிவிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

 


கல்வி மற்றும் மாகாணக் கல்வி அமைச்சுக்களினால் ஒவ்வொரு பாடசாலைக்கும் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைக் கட்டணங்களைத் தவிர மேலதிகமாக எதனையும் அறிவிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க அறிவித்துள்ளார்.

சிறுவர் மற்றும் ஆசிரியர் தினங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்காக பாடசாலை மாணவர்களிடமிருந்தோ அல்லது பெற்றோரிடமிருந்தோ பணம் அறவிடக் கூடாது என அறிவி்க்கப்பட்டுள்ளது.