மீன்களின் விலை சற்று வீழ்ச்சி கண்டுள்ளது .

 


இலங்கையின் மீன்களின் விலை கடந்த வாரத்தில் இருந்து சரிவைக் கண்டுள்ளது.

மண்ணெண்ணெய் விநியோகத்தில் சீரான முன்னேற்றம் மற்றும் மீன்பிடி பருவ ஆரம்பம் ஆகியவற்றின் காரணமாக இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இறைச்சி, கோழி மற்றும் முட்டை போன்ற புரத அடிப்படையிலான பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.

ஒரு வருடத்தில் விலை வீழ்ச்சியடைவது இதுவே முதல் தடவை என்றும் வியாபாரிகள் கூறினார்.

இன்று, பெரும்பாலான மீன் விலைகள்20 சதவீதத்தால் குறைந்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.