கரையோர டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கை மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தின் கடற்கரையை அண்டிய பகுதியில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

 


மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய அதிகாரி ஜி.சுகுணனின் வழிகாட்டலின் கீழ் களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட மாபெரும் கரையோர டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கை நேற்று (30) மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தின் கடற்கரையை அண்டிய பகுதியில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

மண்முனை தென்எருவில் பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட குருக்கள்மடம் தொடக்கம் பெரியகல்லாறு வரையிலான கடற்கரைப் பகுதி முழுவதும் இதன்போது சுத்தம் செய்யப்பட்டதுடன், டெங்கு நுளம்பகள் பெருகும் இடங்கள் அடையாளம் காணப்பட்டு அழிக்கப்பட்டதோடு, பிளாஸ்ற்றிக், போத்தல்கள், கலன்கள், போன்றனவும், இதன்போது சிரமதானத்தின் மூலம் அப்புறப்படுத்தப்பட்டன.