எதிர்வரும் 5ஆம் திகதி நடைபெறவிருந்த மத்திய மாகாண பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கல்வியில் ஒன்றிய தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தினால் கல்விப் பொதுத் தராதர உயர்தர மாணவர்களுக்கான பரீட்சைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
எதிர்வரும் 5ஆம் திகதி பரீட்சைக்கான நேர சூசி வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பல பாடசாலையின் அதிபர்கள் எம்மோடு தொடர்பு கொண்டு சரஸ்வதி பூஜை தினத்தில் நடைபெறவிருக்கின்ற மத்தியமாகாண பரீட்சைகளை ஒத்தி வைக்குமாறு கேட்டுக் கொண்டனர்.
இது தொடர்பில் மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தோடு தொடர்பு கொண்டு குறிப்பிட்ட திகதிக்கான பரீட்சைகளை ஒத்திவைக்குமாறு காங்கிரஸ் கல்வியில் ஒன்றியம் கேட்டுக்கொண்டது.
எமது கோரிக்கையை ஏற்று எதிர்வரும் 5ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற பரீட்சையை ஒத்திவைத்து பிரிதொரு தினத்தில் வைப்பதற்கு மத்திய மாகாண பரீட்சைத் திணைக்களம் தீர்மானித்திருக்கின்றது என்றார்.