ஆசியாவின் பொருளாதாரத்திற்கு துருக்கியின் சந்தை வாய்ப்புகள் முதுகெலும்பு" - தேசியதின வைபவத்தில் அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்





இலங்கையின் பொருளாதார
மேம்பாடுகளுக்கு, துருக்கியின்
சந்தைவாய்ப்புக்கள் பாரிய பங்களிப்புச் செய்வதாக சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

 துருக்கியின் தேசிய தின வைபவத்தில், பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடந்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் குறிப்பிட்ட தாவது;

இலங்கை,துருக்கிக்கிடையிலான உறவுகளை மேலும் நெருக்கமாக்க, விரிவான ஒழுங்கமைப்புக்கள் அவசியம். தேவையான மற்றும் நெருக்கடியான நேரங்களில் துருக்கி உதவியதை, இலங்கை பெருமையோ டு நினைவு கூர்கிறது. தொழினுட்பம், பொருளாதாரம் மற்றும் கலாசார உறவுகளை கட்டியெழுப்பும் புதிய செயற்றிட்டங்களால், இரு நாடுகளதும் நட்புக்கள் நிலைபெறும்.

துருக்கியின் சந்தைவாய்ப்புக்கள், ஆசியாவின் பொருளாதாரத்துக்கு முதுகெலும்பாக திகழ்கிறது. சுனாமி, கொரோனா உள்ளிட்ட இயற்கைச் சவால்களில் இலங்கையை கரையேற்ற துருக்கி அளப்பரிய சேவையாற்றியதாகவும் அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

துருக்கி நாட்டின் 99ஆவது தேசிய தினக் கொண்டாட்டங்கள் கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் அந்நாட்டின் தூதுவர் ஆர்.டிமெட் செக்கசியக்குலு (R.Demet Sekercioglu) தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டும் சிறப்பு விருந்தினராக அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்தவும் கலந்து கொண்டனர்.

சபாநாயகர், அமைச்சர் அலிசப்ரி உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள், இராஜ தந்திரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.