வெளிநாட்டுக்கு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளச் செல்லும் இலங்கை வீரர்கள் காணாமல் போவது ஏன் ?

 


ஸ்பெயினில் நடைபெறும் 23 வயதுக்குட்பட்ட உலக மல்யுத்த சம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ள சென்றிருந்த மூன்று இலங்கை விளையாட்டு வீரர்கள் காணாமல் போயுள்ளனர். கடந்த 22ஆம் திகதி ஆண்களை உள்ளடக்கிய 6 பேர் கொண்ட அணியில் இருவர் காணாமல் போயுள்ளனர். அதனைத் தொடர்ந்து மூன்றாவது விளையாட்டு வீரரும் மறு நாள் காணாமல் போயுள்ளார். இவர்கள் காணாமல்போனமை தொடர்பில் ஸ்பெய்ன் அதிகாரிகளுக்கு இலங்கை அதிகாரிகளால் தகவல் வழங்கப்பட்டபோதும், ஸ்பெய்ன் அதிகாரிகள் அதில் பெரிதும் அக்கறை கொள்ளவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஓகஸ்ட் மாத ஆரம்பித்தில் 2022 பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் போது ஒன்பது தடகள வீரர்களும் ஒரு அதிகாரியும் காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.