நிலக்கரியை ஏற்றிய கப்பலொன்று இன்று(01) நாட்டை வந்தடையவுள்ளது.


 

நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்திற்கான நிலக்கரியை ஏற்றிய கப்பலொன்று இன்று(01) நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

தென்னாபிரிக்காவிலிருந்து நாட்டை வந்தடையவுள்ள குறித்த கப்பலில் 60,000 மெட்ரிக் தொன் நிலக்கரி கொண்டுவரப்படுவதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் அன்ரூ நவமணி குறிப்பிட்டார்.

இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்னரும் 60,000 மெட்ரிக் தொன் நிலக்கரியை ஏற்றிய கப்பலொன்று நாட்டை வந்தடைந்தது.

வாரத்திற்கு ஒரு கப்பல் என்ற அடிப்படையில் 2.2 மெட்ரிக் தொன் நிலக்கரி நாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.