கெக்கிராவ பிரதேசத்திலுள்ள பிரதான பாடசாலையொன்றின் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஒருவர் 06 சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக கெக்கிராவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம், சந்தேகத்திற்குரிய விளையாட்டு பயிற்றுவிப்பாளரை கைது செய்ய கெக்கிராவ காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இப்பாடசாலையின் விளையாட்டு
பயிற்றுவிப்பாளர் 14 மற்றும் 16 வயதுடைய 06 சிறுமிகளை துஷ்பிரயோகம்
செய்ததாக, சிறுவர் பாதுகாப்பு அதிகா
ரசபை கெக்கிராவ காவல்துறையில் செய்த
முறைப்பாட்டின் அடிப்படையில்
காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.