08 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

 


பதுளை, கேகாலை, குருநாகல், கண்டி, மாத்தறை, மொனராகலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய 08 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. 

பதுளை மாவட்டத்தின் பசறை பிரதேச செயலகப் பிரிவுக்கு நாளை பிற்பகல் 2.30 மணிவரை மண்சரிவு குறித்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் மண்சரிவு, மண்மேடு சரிந்து விழுதல் மற்றும் கற்பாறை சரிவு போன்ற அனர்த்தங்கள் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நாட்டை அண்மித்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள குறைந்த வளிமண்டல குழப்பம் காரணமாக நாடு முழுவதும் கடும் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சபரகமுவ, மத்திய, வட மேல், ஊவா மற்றும் வட மாகாணத்தின் சில பகுதிகளில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் ஏனைய இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் எனவும் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.