சேவையின் சின்னம் சுவாமி நடராஜானந்தா மகராஜின் 119 ஆவது ஜனன தின நிகழ்வு அவர் பிறந்த காரைதீவில் நடைபெற்றது .காரைதீவு இந்து சமய விருத்தி சங்க தலைவர் மணிமாறன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் கலந்து சிறப்பித்தார். கௌரவ அதிதியாக காரைதீவுப்பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் கலந்து கொண்டார் .
சுவாமியின் உறவினரான ஓய்வு நிலை ஆசிரியர் அருணாசலம் நந்திக் கொடி ஏற்றி
வைத்ததை தொடர்ந்து அடிகளாரின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை
அணிவிக்கப்பட்டதுடன் உரைகளிடம்பெற்றன.
மன்ற செயலாளர் ஜெயராஜி பஞ்சராத்தி காட்டி பூஜை இடம்பெற்றது.
சுவாமி நடராஜானந்தா நூற்றாண்டு விழாச் சபையின் செயலாளர் சகாதேவராஜா உள்ளிட்ட ஆன்மீக பிரமுகர்கள் அதிபர்கள் சுவாமியின் உறவினர்கள் பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டனர்