சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் 6வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று (02) மாலை 6.00 மணிக்கு நெலும் மாவத்தை தலைமைக் காரியாலயத்தில் மகா சங்கத்தினரின் பங்குபற்றுதலுடன் பிரித் பாராயண நிகழ்வு மட்டுமே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கட்சியின் தலைவரும், முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட அமைச்சர்களின் பங்கேற்புடன் பிரித் பாராயண நிகழ்வு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு கட்சியின் ஆண்டு விழாவைக் கொண்டாட எந்த மாநாடு அல்லது விழா நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய பொருளாதார நெருக்கடியில் மக்கள் பொதுஜன பெரமுன மீது கடும்
அதிருப்தியான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் ஆரம்ப விழாவை
நடத்த மொட்டு கட்சி விரும்பாமல் இருந்திருக்கலாம் எனவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது..