கொடை வள்ளல் உயர்,திரு. வாமதேவன் தியாகேந்திரனின் 71வது பிறந்த தினத்தை முன்னிட்டு நாடு பூராகவும் பயன்தரு மரக்கன்றுகள் நடுதல் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன .

 






 நாடளாவிய ரீதியில் இன,மத,வேறுபாடு இன்றி பல்வேறு மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டு வரும் தியாகி அறக்கொடை நிதியத்தின் ஸ்தாபகத் தலைவர் கொடை வள்ளல் உயர்,திரு.
வாமதேவன் தியாகேந்திரனின் 71வது பிறந்த தினத்தை முன்னிட்டு பல்வேறு மனிதாபிமான வேலைத்திட்டங்களை தியாகி அறக்கொடை நிதியம் முன்னெடுத்து வருகின்றது.

அதற்கு அமைவாக நாடு பூராகவும் பயன்தரு மரக்கன்றுகள் நடுதல் வேலை திட்டம் பல்லின மக்களினது ஒத்துழைப்புடன் பாடசாலைகள், பொது இடங்கள், மத ஸ்தலங்கள் என பல்வேறுபட்ட இடங்களில்
வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 நுவரெலியா மாவட்டத்தின் ஹட்டன்
மற்றும் மஸ்ஹலியா பிரதேச மக்கள்  ஊடகவியலாளர்களின் ஒத்துழைப்புடன் தியாகி அறக்கொடை நிதியத்தின் இணைப்பாளரும், ஊடகவியலாளருமான எம்.ரீ.எம்.பாரிஸ் தலைமையில் இம் மரநடுகை வேலைத்திட்டம்  ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.