ஓமான் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் சுற்றுலா விசாவில் தங்கியுள்ள 77 பேரை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகள் ஆகியோர் அடங்கிய குழுக்கள் அந்தந்த நாடுகளுக்கு பயணிக்கவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.