கொழும்பு நகரை சுற்றிக்காட்ட ஒன்றரை இலட்சம் ரூபாவை வசூலித்த சுற்றுலா வழிகாட்டி கைது .

 


நியூசிலாந்து நாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் இலங்கைக்கு வருகை தந்திருந்த போது, ​​கொழும்பு நகரை சுற்றிப்பார்க்க ஒன்றரை இலட்சம் ரூபாவை சுற்றுலா வழிகாட்டி ஒருவர் பெற்றுக்கொண்டுள்ளார்.

நியூசிலாந்து பயணியிடம் சாரதியொருவர் கொழும்பு நகரைச் சுற்றி வர 20 டொலர் தேவைப்படுவதாகக் கூறியுள்ளார்.

 இதனை தொடர்ந்து ஒரு டொலர் 4,500 ரூபா என்றும், அந்தத் தொகையை ரூபாவாகத் தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டதற்கிணங்க, அந்தத் தொகையை சுற்றுலா பயணி வங்கி அட்டை மூலம் பெற்று அவரிடம் கொடுத்துள்ளார்.

 இது தொடர்பில் பின்னர் நியூசிலாந்து நாட்டவர் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து சுற்றுலா வழிகாட்டியை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.