கா.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தினை தாமதாக்கி மட்டக்களப்பு கல்வி வலயம் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
இறுதியாக வெளிவந்த கா.பொ.த சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு கல்வி வலயமானது அகில இலங்கை ரீதியிலுள்ள 100 கல்வி வலயங்களுக்குள் முதலிடத்தை பிடித்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கும், கிழக்கு மாகாணத்திற்கும் பெருமையை சேர்த்துள்ளது.
எனவே இவ்வாறான மகத்தான சாதனையினை புரிந்த மாணவ செல்வங்களை வாழ்த்துவதுடன் இதற்கென முன்நின்று உழைத்த கல்விப்பணிப்பாளர், அவருடன் இணைந்த குழாமினர், அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என அனைவருக்கும் கல்வியியலாளர்கள் மற்றும் மாவட்ட அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவரும் தமது நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துவருகின்றனர்.