மட்டக்களப்பு மாவட்டத்தில் சமுர்த்தி திட்டத்தின் முன்னேற்றத்தை அறிந்து கொள்வதற்காக மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் ளு.புவனேந்திரன் தலைமையிலான குழுவினர் ஒவ்வொரு பிரதேச செயலகங்களுக்கும் சென்று சமுர்த்தி திட்டம் தொடர்பான முன்னேற்றங்கள் பற்றி ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன்போது துரிதமாக மக்களுக்கு பணி செய்வது ,மக்கள் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகள் மற்றும் துரிதமாக செயற்படுத்த வேண்டிய பணிகள் பற்றி ஆய்வு செய்வதற்கான களவிஜயமாக இக்குழுவினர் பிரதேச செயலங்கள் தோறும் சென்று வருகின்றனர்.
இதன் ஒரு கட்டமாக மட்டக்களப்பு ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலகத்திற்கு கள விஜயம் ஒன்றை மேற்கொண்டு குழுவினருடனான மீளாய்வு கலந்துரையாடல் கூட்டம் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் தனபாலசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது சமுர்த்தி வங்கி தொடர்பான விடயங்கள், கருத்திட்டத்தின்
முன்னேற்றங்கள், கணக்காய்வு பிரிவுக்கான விடயங்கள், சமுர்த்தி சமுதாய
அடிப்படை அமைப்புக்கள் , சமூக பாதுகாப்பு காப்புறுதி பிரிவுக்கான
விடயங்கள், சமுர்த்தி நிவாரனம் தொடர்பான விடயங்கள், நிர்வாக பிரிவு
,சமுர்த்தி முகாமையாளர்கள் மாற்று சமுர்த்தி உத்தியோகத்தர்களுடன் நேரடியாக
கலந்துரையாடப்பட்டத்துடன்
தற்போது வழங்கப்படும் சமுர்த்தி நிவாரணத்தை
மாதாந்தம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், புதிதாக சமுர்த்தி
வங்கியூடாக வழங்கப்படும் முதியோர் கொடுப்பணவுகளை முதியவர்களின் காலடியில்
சேர்க்கும் வன்னம் விரைவாக செயற்படுத்துமாறும் ,சமுர்த்தி வங்கியில் ஆளனி
பற்றாக்குறை ,சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சார்ந்த பல
விடயங்களும் கலந்துரையாடப்பட்டன.
இந்நிகழ்வில் ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், சமுர்த்தி தலைமையக முகாமையாளர், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர், சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.