நாங்கள் உதவி வழங்கும் நிலையில் இல்லை- பங்களாதேஸ் பிரதமர் ஷேக் ஹசீனா

 


பங்களாதேஸ் இலங்கையுடன் நாணய பரிவர்த்தனையில் ஈடுபட்ட பின்னர் பல நாடுகள் எங்களை தொடர்புகொண்டு அவ்வாறான உதவியை நாடின என பங்களாதேஸ் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.   

எங்கள் வெளிநாட்டு கையிருப்பிலிருந்து நாங்கள் இலங்கைக்கு உதவினோம் அதன் பின்னர் பல நாடுகள் என்னை தொடர்புகொண்டன என அவர் தெரிவித்துள்ளார்.

பல அரசாங்கங்கள் என்னை தொடர்புகொண்டுள்ளன. நான் யதார்த்தத்தை அவர்களிற்கு தெரியப்படுத்தியுள்ளேன். நாங்கள் வேறு உதவிகளை அடிப்படையாகவைத்தே வரவு செலவு திட்டத்தை உருவாக்கியுள்ளோம்,இந்த தருணத்தில் நாங்கள் உதவி வழங்கும் நிலையில் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவில் பல நாடுகள் அந்நிய செலாவணி நெருக்கடியை எதிர்கொள்கின்றன. நாங்கள் உடனடியாக சிக்கன நடவடிக்கைகளை பின்பற்றவேண்டும் என ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்