மட்டக்களப்பு மயிலம்பாவெளி விபுலானந்தபுரம் தூய ஜோசெப் வாஸ் ஆலய மறை கல்வி பாடசாலை மாணவர்களின் ஒளிவிழா நிகழ்வு நேற்று நடைபெற்றது
மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் மயிலம்பாவெளி விபுலானந்தபுரம் தூய ஜோசெப் வாஸ் ஆலய மறை கல்வி பாடசாலையின் ஒளிவிழா நிகழ்வுகள் ஆலய பங்கு தந்தை அருட்பணி நிக்லஸ் ஜூட் தலைமையில் நடைபெற்றது
மயிலம்பாவெளி விபுலானந்தபுரம் தூய ஜோசெப் வாஸ் ஆலய மறை கல்வி பாடசாலை ஆசிரியர்களின் ஏற்பாட்டில் மறைக்கல்வி மாணவர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற ஒளிவிழா நிகழ்வில் மாணவர்களின் ஒளிவிழா கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் நிகழ்வில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு புளியந்தீவு புனித மரியாள் பேராலய புனித ஜோசெப் வாஸ் சபையினரால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன
இந்நிகழ்வில் அதிதிகளாக அருட் தந்தையர்கள்,ஏறாவூர் முஹம்மதியா மத்ரஸா பணிப்பாளர் மௌலவி கே எம் எம் கபீர், கிருஸ்ணபிள்ளை சிவபாலன் குருக்கள் , மறை ஆசிரியர்கள் ,மாணவர்கள் , புளியந்தீவு புனித மரியாள் பேராலய புனித ஜோசெப் வாஸ் சபை உறுப்பினரக்ள் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்