பிரபல ஐஸ் போதைப்பொருள் வியாபாரி ஐஸ் போதைப் பொருளுடன் கைது.


 

ஓட்டமாவடி பிரதேசத்தில் பிரபல ஐஸ் போதைப்பொருள் வியாபாரி அரபா நகரில் வைத்து 16 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

காகித ஆலை இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய கதிரவெளி விஷேட அதிரடிப்படையினருடன் இணைந்து மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டார்.

இதில், போதைப்பொருளை விற்பனைக்கு கொண்டு சென்ற மோட்டார் சைக்கிள் மற்றும் போதைப் பொருள் விற்பனை செய்த ஒரு தொகைப்பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.

இவர் நீண்ட காலமாக மிகவும் சூட்சுமமான முறையில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளதுடன், கொழும்பிலிருந்து மொத்தமாக போதைப் பொருளைக்கொண்டு வந்து விற்பனை செய்து வந்ததுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இவரை பல்வேறு தடவைகளில் கைது செய்ய முயற்சித்த போதும் அவர் தப்பித்து வந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக விசாரணையுடன் சட்ட நடவடிக்கைக்காக வாழைச்சேனை பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.