மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலை பெண் சாரணிய மாணவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு இன்று மாலை பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
பாடசாலை மாணவர்களின் பாடவிதான கற்றல் செயல்பாடுகளுடன் மாணவர்களின் மகிழ்ச்சிகாரமான ஆளுமையை விருத்தி செய்யும் செயல்பாட்டுடன் தேசிய ரீதியில் சாரணிய பதக்கங்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில் மாணவ சாரணியன்,பொலிஸ் கெடெட் போன்ற பயிற்சிகள் பாடசாலை மட்டத்தில் முன்னடுக்கப்பட்டு வருகின்றன
இவ்வாறான நிலையில் வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலை மாணவர்களில் பயிற்றுவிக்கப்பட்ட 35 பென்சாரணிய மாணவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றது
வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலை பெண்கள் சாரணிய பொறுப்பாசிரியர் டி
.ஆறணி ஆசிரியரின் ஒழுங்கமைப்பில் பாடசாலை அதிபர் உ .தவதிருமகள் தலைமையில்
நடைபெற்ற பெண் சாரணிய மாணவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வில் பிரதம
விருந்தினராக மண்முனை வடக்கு கோட்டக்கல்விப்பணிப்பாளர் எஸ் பி
.ரவீச்சந்திரா , சிறப்பு அதிகளாக கிழக்குமாகாண பெண் சாரணிய ஆணையாளர்
காயத்திரி நகுலன்,மட்டக்களப்பு தேசிய கல்விக்கல்லூரி விரிவுரையாளர்
டி.மோகனகுமார்,கிழக்குமாகாண பிரதி பெண் சாரணிய ஆணையாளர்
சி.டானியல்
குகநாதன் ,மட்டக்களப்பு வலய பெண் சாரணிய ஆணையாளர் டி .லோகநாயகம்
,கொம்மாதுறை விநாயகர் வித்தியாலய பெண் சாரணிய பயிற்றுவிப்பாளர்
பி.பி.பரிசாதமலர் மற்றும் ஆசிரியர்கள் ,பெற்றோர்களை கலந்துகொண்டனர்