மெக்சிகோவில் வாலுடன் பெண் குழந்தை ஒன்று பிறந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வாலுடன் பிறந்த அந்த அபூர்வக் குழந்தை பிறக்கும் போது முழுமையான வாலுடன் பிறந்துள்ளது.
ஒரு மில்லியனில் ஒரு குழந்தைதான் இப்படி முழுமையான வாலுடன் பிறக்குமாம். அப்படி என்ன அபூர்வம்?
அதாவது உடலிலிருந்து வால் போன்ற ஒரு சிறிய வளர்ச்சியுடன் இதற்கு முன்பும் குழந்தைகள் பிறந்துள்ளன.
ஆனால், அவற்றிற்கும் இந்தக் குழந்தைக்கும் என்ன வித்தியாசம் என்றால், இந்தக் குழந்தையின் உடலில் காணப்படுவது வெறும் ஒரு துண்டு சதை அல்ல. அது முழுமையாக, சதை, இணைப்புத் திசு மற்றும் நரம்புகளுடன் உண்மையான வாலாகவே வளர்ந்துள்ளதுதான் அதிசயம்.
அந்த வாலைக் கிள்ளினால் குழந்தை அழுகிறது. ஆக, அந்த வால் அந்தக் குழந்தையின் உடலின் ஒரு பாகமாகவே வளர்ந்துள்ளது.
உடனடியாக அந்த வாலை அகற்றினால் குழந்தைக்கு ஏதாவது பிரச்சினை ஏற்படலாம் என கருதிய மருத்துவர்கள், அந்தக் குழந்தை பிறந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு, அந்த வால் 5.7 சென்றிமீற்றர் நீளம் வளர்ந்தபிறகு, அதை அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளார்கள்.
வால் அகற்றப்பட்ட பிறகு அந்தக் குழந்தை நன்றாக இருப்பதாகவும், அவளுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.