இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் அவர்களின் வீட்டுக்கு முன்னால் அவரது மெய்பாதுகாவலர் மேற்கொண்ட துப்பாக்கி
சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த பாலசுந்தரத்தின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்றது.
இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் அவர்களின் வீட்டுக்கு முன்னால் அவரது மெய்பாதுகாவலர் மேற்கொண்ட துப்பாக்கி
சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த பாலசுந்தரத்தின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்றது.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி தியாகேஸ்வரன் முன்னிலையில் இன்று வழக்கு எடுக்கப்பட்டு எதிர்வரும் 2023ம் ஆண்டு மாசி மாதம் 01ஆம் திகதி வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
21-06-2021 அன்று மட்டக்களப்பு,மன்ரேசா வீதியில் உள்ள இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் வீட்டின் முன்பாக அவரது பாதுகாப்பு அதிகாரி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மகாலிங்கம் பாலசுந்தரம் என்னும் இளைஞர் உயிரிழந்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்காக படுகொலை செய்யப்பட்ட மகாலிங்கம் பாலசுந்தரத்தின் தந்தையான வேலுப்போடி மகாலிங்கம், தாயாரான மா.சின்னப்பிள்ளை நீதிமன்றத்தில் ஆஜராகியதுடன் குறித்த மெய்ப்பாதுகாவலர் இன்றையதினம் வழக்கிற்கு ஆஜராகவில்லை.
இருப்பினும் எதுவித விசாரணைகளும் முன்னெடுக்கவில்லை என்பதுடன் அடுத்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.