யாழ்ப்பாணம் சுதுமலையைச் சேர்ந்தவரை திருமணம் செய்து கனடாவில் வாழும் பிரபல நடிகை ரம்பா, தனது பிள்ளைகளுடன் பாடசாலையிலிருந்து வீடு திரும்பும்போது விபத்துக்குள்ளானதாக தெரிவித்துள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டு கனடா வாழ் யாழ்ப்பாண தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாதனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ரம்பா. இவருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர் .
இந்நிலையில், குழந்தைகளுடன் பாடசாலையிலிருந்து வீடு திரும்பும்போது அவரின் கார் விபத்துக்குள்ளானதாக தெரிவித்துள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் நடிகை ரம்பா வெளியிட்ட பதிவில்,
பாடசாலையிலிருந்து குழந்தைகளை அழைத்துச் செல்லும் வழியில் எங்கள் கார் மற்றொரு கார் மீது மோதியது. "நான் குழந்தைகளுடன் மற்றும் என் ஆயா" நாங்கள் அனைவரும் சிறு காயங்களுடன் பாதுகாப்பாக இருக்கிறோம்.
என் குட்டி சாஷா இன்னும் மருத்துவமனையில் இருக்கிறார். மோசமான கெட்ட நேரம்.
தயவு செய்து எங்களுக்காக பிரார்த்தியுங்கள் என்று உருக்கமாக
பதிவிட்டுள்ளார்.