சமஸ்டி என்றால் நாடு ஒன்பது துண்டாகி விடும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில், சிங்களவர்களுக்கு ஒரே நாடே இலங்கை, இதனாலேயே இலங்கையை “சிங்களே” என்று முன்னைய காலத்தில் அழைத்துள்ளனர் , நாடு சமஷ்டியாகி 9 துண்டுகளாகினால் வடக்கு, கிழக்கில் சாசனத்தை பாதுகாக்க முடியாது. வடக்கு, கிழக்கில் பௌத்த தொல்லியல் இடங்கள் அழிவடையும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
வடக்கில் இருந்து சிங்களவர்களையும், முஸ்லிம்களையும் விரட்டி இன சுத்திகரிப்பை மேற்கொண்டது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மட்டுமன்றி பிரிவினைவாத தமிழ் அரசியல்வாதிகளுமே ஆகும் என குறிப்பிட்டுள்ளார்.