‘பால்நிலை அடிப்படையிலான வன்முறையை இல்லாதொழிப்போம்’ எனும் தொனிப்பொருளில் ஐந்து நாள் பயிற்சி செயலமர்வு மட்டக்களப்பில் நடைபெறுகின்றது
மட்டக்களப்பு வை எம் சி எ நிறுவனத்தின் ஏற்பாட்டில் எஸ் எல் சி டி எப் நிறுவனத்தின் நிதி அனுசரணையில் ஐந்து நாள் நடைபெறுகின்ற பயிற்சி செயலமர்வில் வளவாளர்களாக இர்பான் ஜுனைதீன் மற்றும் வாணி சைமன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
தற்போதைய பொருளாதார நெருக்கடியான சூழ்நிலையில் சமூகமட்டத்தில் அதிகரித்துள்ள வீட்டு வன்முறைகள்,கூடுதலாக மாவட்டத்தில் அதிகளவில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள பால்நிலை வன்முறைகள்,போதைப்பொருள் பாவனை போன்ற சமூக விரோத செயல்பாடுகளை தடுப்பதற்கான சமூக மட்ட மற்றும் மாவட்ட அரசசார்பற்ற நிறுவங்களின் உத்தியோகத்தர்களுக்கான வளவாளர் பயிற்சி பட்டறையாக நடாத்தப்படுகின்றது.
மட்டக்களப்பு வை எம் சி எ நிறுவனத்தின் ஏற்பாட்டில் வை எம் சி எ நிறுவன
பதில் பொதுச்செயலாளர் பெற்றிக் தமையில் ஐந்து நாள் நடைபெறுகின்ற
செயலமர்வில் மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்
அருளாளினி சந்திரசேகரம்,
எஸ் எல் சி டி எப் நிறுவன முகாமையாளர் ஜெசிந்தா
முருகவேள் மற்றும் மாவட்ட அரசசார்பற்ற நிறுவங்களின் உத்தியோகத்தர்கள்
கலந்துகொண்டுள்ளனர்