மாணவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.

 


காத்தான்குடி பொலிஸ் பொறுப்பதிகாரியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு கல்லடி புதுமுகத்துவாரம் புனித இக்னேசியஸ் வித்தியாலய மாணவர்களுக்குப் ‘போதைவஸ்து சிறுவர் பாதுகாப்பு’ எனும் தொனிப் பொருளில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு வித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது

வித்தியாலய அதிபர் வசந்தி ஜெயந்திரராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், காத்தான்குடி பொலிஸ் சிறுவர் பாதுகாப்பு பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர் ஜெயசுதா வளவாளராக கலந்துகொண்டு தற்போதைய பாடசாலை மாணவர்களின் போதைப்பொருள் பாவனை ,இன்றைய அசாதாரண சூழ்நிலையில் மாணவர்கள் தங்களை எவ்வாறு பாதுகாப்புத் கொள்வது குறிப்பாக வாகனங்களில் பயணம் செய்யும் போதும், அன்றாடம் பயணிக்கும் இடங்களிலும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது போன்ற விடயங்கள் மாணவர்களுக்கு தெளிப்படுத்தலை வழங்கி இருந்தார்

இந்நிகழ்வில் பொலிஸ் சார்ஜன்ட் எம்.எஸ். எம். ஜின்னா, பொலிஸ் உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.