உலக வாழ் கத்தோலிக்கர்கள் இறந்தவர்களுக்காக அஞ்சலி செலுத்தும் நாளாக மரித்த விசுவாசிகளுக்கான நினைவு நாளாக இன்றைய தினம் அனுஷ்டிக்கின்றனர்
கிறிஸ்தவர்கள் மரித்தோரை நினைவு கூர்ந்து அவர்களுக்காக இறைவேண்டல் செய்கின்ற ஒரு சிறப்பு விழாவாக நவம்பர் இரண்டாம் திகதி நினைவு கூறப்படுகின்றது
இவ்விழாவினை கல்லறைத் திருநாள் என அழைக்கப்படுவதுடன் கத்தோலிக்க
திருச்சபை உட்பட பல கிறிஸ்தவ சபைகள் இவ்விழாவை நவம்பர் மாதம் இரண்டாம் நாள்
இன்றையதினம் கொண்டாடுகின்றனர் .
அந்தவகையில் இன்றைய தினம் மட்டக்களப்பு
மறைவாட்டத்தில் உள்ள அனைத்து கிறித்தவ ஆலயங்களில் இறந்தவர்களுக்காக அஞ்சலி
வழிபாடுகள் இடம்பெற்றதுடன் உறவினர்களினால் தங்களது உறவுகள் அடக்கம்
செய்யப்பட சேமக்காலை துப்பரவு செய்யப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
மரித்த விசுவாசிகளுக்கு நினைவு கூறு வகையில் மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் பங்குத்தந்தை ஜோர்ஜ் ஜீவராஜ் அடிகளார் தலைமையில் விசேட அஞ்சலி திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது