கோட்டாபய ஒரு சிறந்த மனிதர். அதனை நான் இப்போதும் கூறுகிறேன். ஆனால் அவரது கொள்ளளவு, அரசியல் அனுபவமற்ற தன்மை, இராணுவ கட்டமைப்பிலிருந்து சகல விடயங்களை பார்த்தமை, குடும்ப அரசியலுக்கு தேவைக்கு அதிகமாக அடிபணிந்தமை போன்றவற்றால் நாம் எதிர்பார்த்த கோட்டாபயவை காணமுடியவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும தெரிவித்துள்ளார். தான் அரசிலிருந்து விலகியமை தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். திடீரென்று அரசியலுக்கு வந்து ஜனாதிபதியாக வந்தவர்கள் கூட உலகில் சிறந்த ஆட்சியை வழங்கியிருக்கிறார்கள். ஆனால் கோட்டாபயவின் குடும்ப உறவினர்கள் அநாவசியமான முறையில் அதிகாரத்தை கையில் எடுத்தனர். அதற்கு அவர் சுதந்திரமாக இடமளித்தார். நெகிழ்வு போக்குடன் செயல்படவில்லை. என்ன நினைத்தாரோ அதை செய்தார்.