மட்டக்களப்பு,மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட வறிய மக்களுக்கான வாழ்வாதார உதவிகள் மற்றும் விளையாட்டுக்கழகங்களுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது.
மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலாளர் திருமதி தட்சணகௌரி டினேஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இராஜாங்க அமைச்சரின் பன்முகப்படுத்தப்பட்ட மற்றும் விசேட நிதியொதுக்கீடுகளின் கீழ் பெறப்பட்ட சுமார் 95இலட்சம் ரூபா மூலம் இந்த வாழ்வாதார உதவிகள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இதன்போது வறிய 63குடும்ப பெண்களுக்கு தையல் இயந்திரங்களும் மீனவர்கள் 10பேருக்கான மீன்பிடி தோனிகளும்,நான்கு மேசன் தொழிலாளர்களுக்கான உபகரணங்களும் நான்கு விளையாட்டு கழகங்களுக்குமான விளையாட்டு உபகரணங்களும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் இராஜங்க அமைச்சரின் இணைப்பாளரும் மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேசசபை உறுப்பினருமான மோகன் மற்றும் பிரதேச செயலகத்தின் உதவி திட்டமிடல் பணிப்பாளர் பிரபாகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.