மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டைக்கல்லாறு மகா
வித்தியாலயத்தில் க,பொ.த.உயர்தர மாணவர்களின்
மாணவர் தின நிகழ்வு வித்தியாலய அதிபர் க.செல்வராசா தலைமையில் நடைபெற்றது.
மாணவர் தின நிகழ்வு வித்தியாலய அதிபர் க.செல்வராசா தலைமையில் நடைபெற்றது.
இங்கு மாணவர்களினால் பல்வேறு கலை நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டதுடன். இவ் வருடம் பரிட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களை வழி அனுப்பிவைக்கும் பிரியா விடை வைபவமும் இடம்பெற்றது.
நிகழ்வில் பிரதியதிபர்களான இராதகிருஸ்ணண்புவனேஸ்வரி, பி.சண்முகநாதன் உட்பட ஆசிரியர்கள், கல்விசார ஊழியர்கள், மாணவர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயமானது கல்வி மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.