வடக்கு கிழக்கு ஓப்பனையாளர் உதவும் கரங்கள் அமைப்பினால் காரைதீவு மண்ணின் கலைஞர் கௌரவிப்பு

 


வடக்கு கிழக்கு ஓப்பனையாளர் உதவும் கரங்கள் அமைப்பினால் காரைதீவு மண்ணின் இளம் கவிஞர் எழுத்தாளர் பாடலாசிரியர் குறும்பட நடிகர் என பல்துறை சார்ந்த பன்முக கலைஞன் காரை.யன் கதன் என அழைக்கப்படும் சிவானந்தராசா கதன் இன்று கௌரவிக்கப்பட்டதுடன் சமூகத்தின் சாரல் எனும் புனைப்பெயரினையும் அவருக்கு சூட்டி மகிழ்வித்தனர்.

வடக்கு கிழக்கு ஓப்பனையாளர் உதவும் கரங்கள் அமைப்பின் அம்பாறை மாவட்ட சமூக செயற்பாட்டாளர் அக்கரைப்பற்றை சேர்ந்த செல்வம் உதயகுமாரின் இல்லத்தில் வடக்கு கிழக்கு ஒப்பனையாளர் உதவும் கரங்கள் அமைப்பின்; தலைவர் முருகப்பிள்ளை ஜெயராசாவின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வின்போதே காரையன் சுதன் கௌரவிக்கப்பட்டார்.

மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் வடக்கு கிழக்கு ஓப்பனையாளர் உதவும் கரங்கள் அமைப்பின் கடந்த கால வேலைத்திட்டங்கள் மற்றும் எதிர்கால நடவடிக்கை தொடர்பில் கருத்து வெளியிடப்பட்டது.

இதேநேரம் சமூகத்தின் சாரல் எனும் இருவட்டும் கவிதை தொகுப்பும் வெளியீடு செய்து வைக்கப்பட்டதுடன் அமைப்பின் நினைவுச் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது. அத்தோடு இளம் கவிஞருக்கு சமூகத்தின் சாரல் என்னும் புனைப்பெயர் சூட்டப்பட்டது.

இதேநேரம் சமூக பணிகளை முன்னெடுத்துவரும் உறுப்பினர்களும் கௌரவிக்கப்பட்டனர். நிகழ்வில் வடக்கு கிழக்கு ஓப்பனையாளர் உதவும் கரங்கள் அமைப்பின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.