முரண்பாட்டு பன்முக நிலைமாற்றத்திற்கூடாக இளைஞர் அமைதி முகாம் எனும் தொனிப்பொருளிலான பயிற்சி நெறி .

 


மட்டக்களப்பு சர்வோதய வள நிலையத்தில் இலங்கையின் பல பாகங்களிலுமிருந்தும் பங்குபற்றிய தமிழ் முஸ்லிம் சிங்கள சமூகங்களையும் சேர்ந்த இளையோருக்கான பயிற்சி நெறி இடம்பெற்றது.

‘முரண்பாட்டு பன்முக நிலைமாற்றத்திற்கூடாக இளைஞர் அமைதி முகாம்’ எனும் தொனிப்பொருளிலான வதிவிடப் பயிற்சி நெறியில் வளவாளராக இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் திட்ட அதிகாரி பாஸ்தேவன் கலந்து கொண்டு அவர் அறிமுக உரையாற்றினார்.

முப்பது ஆண்டு காலம்வரை இடம்பெற்ற யுத்தம் இலங்கையில் வாழும் சிங்கள தமிழ் முஸ்லிம் சமூகங்களை பரஸ்பர உறவாகப் பார்க்கும் கண்ணோட்டத்தை இல்லாமல் செய்து ஒருவருக்கொருவரை விரோதியாகப் பார்க்க வைத்தது என இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் திட்ட அதிகாரி பாஸ்தேவன் தெரிவித்தார்.

இப்பயிற்சி நெறிகளில் இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் திட்ட முகாமையாளர் சமன் செனவிரெட்ண, திட்ட உதவி முகாமையாளர் ரஷிகா செனவிரெட்ண, திட்ட அலுவலர் ஜசானியா ஜயரத்ன, தேசிய சமாதானப் பேரவையின் மாவட்ட சர்வமத இணைப்பாளர் ஆர். மனோகரன் ஆகியோரும் வளவாளர்ளாக றேணுகா ரத்னாயக்க, சனம் டில்ஷான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.