உள்ளூர் பால்மாவின் விலையை மேலும் அதிகரிக்க பால்மா நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.
450 கிராம் நிறையுடைய உள்ளூர் பால்மா பொதியின் விலை 175 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் பால்மா நிறுவனமொன்றின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
975 ரூபாவாக இருந்த 450 கிராம் உள்ளூர் பால் மா பொதியின் புதிய விலை 1150 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.