இலங்கையை சூழவுள்ள பகுதிகளில் உருவாகியிருந்த கீழ் வளிமண்டல தளம்பல் நிலை தொடர்ந்து காணப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட வளிமண்டலவியல் திணைக்கள பொறுப்பதிகாரி பாலசுப்பிரமணியம் ரமேஷ் தெரிவித்துள்ளார் .
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலை அல்லது இரவில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வளிமண்டலவியல் திணைக்கள பொறுப்பதிகாரி அதிகாரி தெரிவித்துள்ளார்.
தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் இன்று அதிகாலை வெளியிடப்பட்ட வானிலை தொடர்பர் மட்டக்களப்பு மாவட்ட வளிமண்டலவியல் திணைக்கள பொறுப்பதிகாரி பாலசுப்பிரமணியம் ரமேஷ் மேலதிக தகவல்களை வழங்கினார்