பூகோள மாற்ற ஆராய்ச்சிக்கான தெற்காசிய உபகுழுவின் கூட்டம் இன்று (29) கொழும்பில் ஆரம்பானது. சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் இக் கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்தார்.
மேலும், பூகோள மாற்ற ஆராய்ச்சிக்கான ஆசிய,பசுபிக் வலையமைப்பும் இங்கு அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் ஆரம்பமான இந்நிகழ்வில், பூகோளத்தைப் பாதுகாப்பதற்கான, தெற்காசிய அபிவிருத்திச் செயற்றிட்ட முன்மொழிவுப் பயிற்சிச் செயலமர்வும் இடம்பெற்றது.
இங்கு உரையாற்றிய அமைச்சர் கூறியதாவது,
பூகோள மாற்றத்துக்கான காரணங்களைக் கட்டுப்படுத்தும் மிக முக்கிய கூட்டம் இது. இங்கு தெற்காசியாவின் காலநிலை நிபுணர்கள் ஒன்று கூடியுள்ளனர். ஆசிய,பசுபிக் வலையமைப்பின் வருகையை பாராட்டாமல் இருக்க முடியாது. உலக, உயிரிகளின் உயிர்வாழ்வுக்கு காலநிலைமாற்றம் பிரதான பங்களிக்கிறது.
எனவே,எமது எதிர்காலத்தை வளமாக்க,நாம்,பூமியைப் பாதுகாப்பது அவசியம். இலங்கையின், பல்லினத்தன்மைவாய்ந்த உயிரிகளைப் பாதுகாப்பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிக அக்கறையுடன் செயற்படுகிறார். இதற்காக பல்வேறு திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
இவரது,அக்கறைக்கு அச்சாணியாக இந்தக் கூட்டம் அமையும் எனவும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.
இக்கூட்டத்தில்,சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க,ஆசிய,பசுபிக் வலையமைப்பின் பணிப்பாளர் ருயுஜி ரொமிஸ்கா, பிரதித் தலைவர் லிண்டா ஏ,ஸ்டீவென்ஸன் மற்றும் சுற்றாடல் அமைச்சின் சர்வதேச தொடர்பாடல் பணிப்பாளர் ஜானகி அமரதுங்க உள்ளிட்ட தெற்காசிய நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.