பிளாஸ்டிக் இல்லாத உலகத்தை உருவாக்கி உயிர்களையும் , சுற்று சூழலையும் பாதுகாப்போம் .


















 

 இன்று காலை  HELP EVER  இளையோர் அமைப்பினரால்  பிளாஸ்டிக்  இல்லாத உலகத்தை உருவாக்கி உயிர்களையும் , சுற்று சூழலையும்  பாதுகாப்போம்  என்ற தொனிப்பொருளில்   நாவலடி மற்றும் முகத்துவாரத்தினை சூழ உள்ள கடற்கரை பிரதேசத்தில் இன்று சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது..
வெள்ளத்தினால் கரையொதுங்கிய பிளாஸ்டிக் போத்தல்களை  அங்கிருந்து அகற்றப்பட்டதுடன் , கடற்கரை ஓரத்தையும்  துப்பரவு செய்தனர் .
இந்த சிரமதானப்பணி காலை 7.30 மணி முதல்  10.00 மணி வரை முன்னெடுக்கப்பட்டது
பிரதேசத்தின் சமூக  நலன் கருதி  மேற்கொள்ளப்பட்ட சிரமதானப்  பணியை  குறிப்பிட்ட ஊர் மக்களும் , சமூக ஆர்வலர்களும் வெகுவாக பாராட்டியதோடு தமது வாழ்த்துக்களையும் தெரிவித்து கொண்டனர் .