இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் ஏற்பாட்டில் அதன் நலிவுற்ற பெண்கள் சிறுவர்கள் தொடர்பான சமூக அபிவிருத்தி அமுலாக்கத் திட்டத்தின் வெளிப்படுத்துகை பிரதேச மட்ட நிகழ்வு வாகரை கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.
வாகரைப் பிரதேச சிறுவர் சபை, மகளிர் அமைப்புக்களின் ஏற்பாட்டில் இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் தங்கராஜா திலீப்குமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பெண்கள், சிறுவர்கள், மாணவர்கள் மற்றும் சிரேஷ்ட பிரஜைகளின் வெளிப்படுத்துகை அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றன.
தற்போது நாடு எதிர்கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக வாகரைப் பிரதேச மாணவர் வருகை 50 சத வீதமாகக் காணப்படுவதோடு மாணவர் இடைவிலகலும் அதிகரித்துள்ளதாக மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் ஜி. அருணன் தெரிவித்தார்.