தூதரக விவகாரங்கள் பிரிவின் சான்றிதழ்கள்/ஆவணங்களை சான்றளிப்பதற்கான கட்டணத்தை வெளியுறவு அமைச்சகம் 01 ஜனவரி 2023 முதல் திருத்தியது.
புதிய கட்டணங்களின் பிரகாரம், பரீட்சைகள் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட பரீட்சை சான்றிதழ்களுக்கு 800 ரூபாயும், வெளிநாட்டுப் பிரஜைக்கு இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட எந்தவோர் ஆவணத்திற்கும் ரூபாய் 3,000, எந்தவோரு ஏற்றுமதி ஆவணத்துக்கும் ரூபாய் 8,000 மற்றும் வேறு ஏதேனும் ஆவணத்துக்கு 1,200 ரூபாயென திருத்தப்பட்டுள்ளது.