தெரிவு செய்யப்பட்ட வறிய மாணவர்ககளுக்கு வாழைச்சேனை வை.எம்.சி.எ மண்டபத்தில் 11 சைக்கிள் வழங்கப்பட்டன.

 


 

வடக்கு கிழக்கு மறுவாழ்வு அமைப்பு மூலமாக கல்விக்கு கரம் கொடுப்போம் திட்டத்தின் கீழ் வாழைச்சேனை 10 வட்டார கிளைகளில் தெரிவு செய்யப்பட்டு 11 சைக்கிள் அதி கஷ்டப் பிரதேசங்களில் உள்ள வறிய மாணவர்களை தெரிவு செய்து வழங்கி வைக்கும் நடவடிக்கை வாழைச்சேனை வை.எம்.சி.எ மண்டபத்தில் தமிழரசு கட்சி வாழைச்சேனை பிரதேச சபையின் உறுப்பினர் கதிரவேல் நல்லரெட்ணம் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வுக்கு ஜனாதிபதி சட்டத்தரணியும் தமிழரசு கட்சியின் ஊடக பேச்சாளருமாகிய பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தமிழரசு கட்சியின் பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் பயனாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

அதிதிகள் நிகழ்வுக்கு மலர் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதுடன் மங்கள விளக்கு ஏற்றப்பட்டு இறைவணக்கம் இடம்பெற்றது.

நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் இரா .சாணக்கியன் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் உரையாற்றினார்கள்

இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்:

அனைவருக்கும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

வாழைச்சேனை பிரதேச சபை மட்டுமல்ல ஆரையம்பதி, ஏறாவூர் பற்று பிரதேச சபையில் தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கை நடைபெறுகின்றது.

எதிர்வரும் தேர்தலில் அதிக உறுப்பினர்களை நாம் தெரிவு செய்யவேண்டும்
என கருத்துக்களை தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்:

அரசியல் மாற்றம் தேர்தல் மூலமாகத்தான் ஏற்படும்.

கடந்த வரலாற்றில் பல மாற்றம் இடம்பெற்றுள்ளது.

மக்கள் புரட்சியினால் தான் தற்காலத்தில் ஏற்பட்டது.

தமிழரசு காட்சி சாத்வீகம் மூலம் மாற்றங்களை எதிர்பார்ப்பவர்கள்.

பண்டா செல்வா ஒப்பந்தம் மூலமே தீர்வு என்ன என்பது சொல்லப்பட்டுள்ளது.

1957 தீர்க்கப்பட்ட ஒருவிடயம்.

சிங்கள மக்களின் மூலமாக எழுதப்பட்ட தீர்வில் பல விடயங்கள் சொல்லப்பட்டுள்ளது.

அனைத்தும் எழுதப்பட்ட விபகாரம்.

இரண்டு ஒப்பந்தங்கள் கிளித்து எறியப்பட்டுள்ளது. ஒன்று தற்போதும் வைத்துள்ளதாக!! தகவல்.

தற்போதும் அரசாங்கம் தீர்ப்போம் என தெரிவித்தாலும் அதே விடையத்தை 3 விடயம் சொல்லியிருக்கின்றோம். மூக்கிய 3 விடயங்களை சொல்லியிருக்கின்றோம்.

உள்ளக விடயத்தில் சமஸ்டி கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் அதுதான் எங்கள் நிலைப்பாடு.

டக்லி மற்றும் பண்டா ஒப்பந்தம் அதைத்தான் தற்போதைய ஜனாதிபதி சமர்ப்பித்துள்ளார்.

எதிர்கட்சி சஜீத் கூட சொல்லியிருக்கின்றார்.

சர்வதேச அழுத்தம் காரணமாக ரணில் எங்களை அழைக்கின்றார்.

இந்த சந்தர்ப்பத்தில் ரணில் கூப்பிட்டால் முகத்தை திருப்பித்து போவது சரியில்லை.

ஜனாதிபதி பட்டம் மற்றும் நல்லா படம் காட்டுகின்றார் என எங்களுக்கும் தெரியும்.

நாங்கள் காலவரையரையை தெரிவிக்கவில்லை ஜனாதிபதி தந்திருக்கின்றார்.

சர்வதேசத்தை குழப்புவது நாங்கள் இல்லை. அரசாங்கம்தான்.

கை கூடலாம் கை கூடாமல் இருக்கலாம்.

இக்காலத்தில் நாங்கள் பல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். காணி உள்ளிட்டவை.

எங்களின் அடிப்படை மூலதனத்தை செய்து முடிக்கவேண்டும்.

பெரும்பான்மை சமூகத்தில் உதயன்ம்பபில விமல் போன்ற எதிரானவர்கள் நம் தரப்பிலும் இருக்கின்றார்கள் இருக்கதான் வேண்டும் போன்ற கருத்துக்களை தெரிவித்தார்.