மட்டக்களப்பில் இடம்பெற்ற சாரணிய இயக்கத்தின் 110ம் ஆண்டு விழா.

 












 

மட்டக்களப்பில் இடம்பெற்ற சாரணிய இயக்கத்தின் 110ம் ஆண்டு விழா!!
இலங்கையில் சாரணிய இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு 110 வருட நிறைவினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நேற்றைய தினம் சாரண விழிப்புணர்வூட்டும் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தது.
அதனை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்திலும் விழிப்புணர்வூட்டும் நிகழ்வுகள்  இடம்பெற்றிருந்தது.
மட்டக்களப்பு மாவட்ட சாரணர் கிளையின் சாரண ஆணையாளர் தேசகீர்த்தி விவேகானந்தா பிரதீபன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வின் முதல் நிகழ்வாக மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இருந்து சாரணிய மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம் ஆரம்பமாகி பிரதான வீதி வழியாக தாண்டவன்வெளி வரை சென்று மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியை சென்றடைந்தது.
அதன் பின்னர் மாலை 6.30 மணி தொடக்கம் 7.30 மணிவரை புனித மிக்கேல் கல்லூரி வளாகத்தில் தீப்பாசறையும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து வலயங்களிலும் உள்ள சாரண மாணவ மாணவிகள், உதவி மாவட்ட ஆணையாளர்கள், மாவட்ட சாரண தலைவர்கள், சாரண ஆசிரியர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சாரண இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு 105 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளதுடன், 1917 ஆம் ஆண்டு மட்டக்களப்பு புனித மிக்கேல் தேசிய பாடசாலையிலும், மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியிலும் ஆரம்பிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.