1400 பலாமரக் கன்றுகள் வழங்கம் திட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரனின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 


எதிர்வரும் 75 வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு 1400 பலாமரக் கன்றுகள் வழங்கம் திட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரனின் தலைமையில் மாவட்ட செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மாவட்ட அரசாங்க அதிபர் கருணாகரனின் வழிகட்டலின்கீழ் உணவுப் பாதுகாப்புத் திட்டத்திற்கமைவாக மாவட்டத்தின் உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்யும் நோக்கில் மாவட்ட செயலகம், விமானப்படை மற்றும் 14 பிரதேச செயலகங்கள் இணைந்து இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துகின்றன.

இதற்கமைவாக 14 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு சுமார் 1400 பலாமரக் கன்றுகளை வழங்கும் திட்டத்தின் முன்னோடி நிகழ்வாக விமானப் படையினால் பலாமரக்கன்றுகள் கையளிக்கும் நிகழ்வு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இதன் முதற்தொகுதி பலாமரக் கண்றுகளை விமானப் படையின் குறூப் கெப்டன் டிP.ஜீ.பீ.ரீ.கே. வர்கசூரிய மாவட்ட அரசாங்க அதிபர் கருணாகரனிடம் வழங்கி வைத்தார். இதன் அடுத்த கட்டங்களாக பிரதேச செயலகப் பிரிவுகளில் பலாமரக் கண்றுகளை தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு விநியோகிக்கும் நிகழ்வு மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்தின் வழிகாட்டலில் விமானப்படையனால் மேற்கொள்ளப்படவுள்ளன.

மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர் ஏ. நவேஸ்வரன், மாவட்ட உரச் செயலக உதவிப் பணிப்பாளர் கே.எல்.எம். சிராஜுதீன் மாவட்ட பொரியியலாளர் கே. சுமன், நிர்வாக உத்தியோகத்தர் கே. தயாபரன், மாவட்ட தகவல் பொறுப்பதிகாரி வீ. ஜீவானந்தன், சமுர்த்தி திட்ட முகாமையாளர் எம். அலிஅக்பர். நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் எம். ஜுமைஸ் உட்பட உத்தியோகத்தர்கள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.