14 வயது பள்ளி மாணவி பாலியல் வன்புனர்வு.

 


 

மொனராகலை தொம்பகஹவெல பிரதேசத்தில்14 வயது பள்ளி மாணவி பாலியல் வன்புனர்வு செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த குற்றச் சம்பவம் தொடர்பில் அப்பிரதேச ஆலயமொன்றின் தலைவர் உட்பட 04 பேரை தொம்பகஹவெல காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஜா-அல பிரதேசத்தை சேர்ந்த சிறுமி, தொம்பகஹவெல பிரதேசத்தை சேர்ந்த தனது சித்தியின் வீட்டிற்கு பாடசாலை விடுமுறையின் போது வந்துள்ளதாகவும், அந்த காலப்பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

 தனது பாட்டி மற்றும் அத்தையுடன் கோவிலுக்கு சென்ற போது, ​குறித்த இருவரின் உதவியுடன், கோவிலுக்குள் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி தலைவரின் சகோதரர்களில் ஒருவரும் சிறுமியின் அத்தையின் வீட்டிற்குச் சென்று சிறுமியை பாலியல் வன்புனர்வு செய்துள்ளதாகவும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.