15 வயதுடைய மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஆசிரியரை எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹொரணை பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
ஹொரணை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் ஆசிரியராக பணிபுரியும் 42 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
துஷ்பிரயோகத்திற்கு உள்ளான மாணவியின் தாயும் தந்தையும் வெளிநாட்டில் இருப்பதாகவும், தாயின் சகோதரியிடமே (சித்தி) பாதிக்கப்பட்ட மாணவி இருப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மாணவியின் சித்தி வீட்டை விட்டுச் சென்றபோது, சந்தேகநபரான ஆசிரியர் வீட்டுக்கு வந்துள்ளார்.
இதன்போது சித்தி வீட்டுக்கு திரும்பிய நிலையில், மாணவியும், ஆசிரியரும் ஒன்றாக இருப்பதையும், மாணவிக்கு ஆசிரியர் முத்தம் கொடுப்பதையும் கண்ட சித்தி வெளிநாட்டிலுள்ள தாயாருக்கு தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் தொலைபேசிக்கு ஆசிரியர் காதல் வார்த்தைகள் கூறி குறுஞ்செய்தி அனுப்பியுள்ளமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.